கொலம்பியாவில் மர்மநபர்களால் கடத்தப்பட்ட லிவர்பூல் வீரரின் பெற்றோர்
லிவர்பூலின் கொலம்பிய வீரர் லூயிஸ் டயஸின் தாய் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளார், ஆனால் அவரது தந்தையைத் தேடும் பணி தொடர்கிறது என்று கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கூறினார்.
டயஸின் தாய் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள பாரன்காஸில் மீட்கப்பட்டதாக பெட்ரோ, X இல் பதிவிட்டுள்ளார்.
“நாங்கள் தந்தையைத் தேடுகிறோம்,” என்று பெட்ரோ கூறினார்.
கொலம்பியாவின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அவர்கள் இந்த வழக்கில் தீவிரமாக பணியாற்றி வருவதாகக் கூறினார்.
கொலம்பிய வீரர் லூயிஸ் டியாஸின் பெற்றோர் கடத்தப்பட்டதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் அறிந்தது முதல், லா குவாஜிராவின் பர்ரான்காஸ் செக்டாரில், சிறப்பு வழக்கறிஞர்கள், காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் அடங்கிய குழு ஒன்று “இவர்களின் இருப்பிடத்தை” கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது. என்று அலுவலகம் X இல் தெரிவித்தது.
லூயிஸ் மானுவல் டயஸ் மற்றும் சிலேனிஸ் மருலாண்டா ஆகியோர் லா குவாஜிரா பகுதியில் உள்ள ஒரு சேவை நிலையத்தில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் அவர்களை அழைத்துச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் வில்லியம் சலமன்கா, இந்த வழக்கைச் சமாளிக்க புலனாய்வு முகவர்களையும் மற்ற காவல் துறையினரையும் அந்தப் பகுதியில் நிறுத்தியதாகக் கூறினார்.