தமிழ்நாடு பொழுதுபோக்கு

பிக்பாஸ் விக்ரமன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு

பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். இவர் மீது சென்னை பெருங்குடியை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான பெண் ஒருவர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

அதில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான விக்ரமன் திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப் மற்றும் மொபைல் வாங்கினார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினார்.

இதுபற்றி விக்ரமனிடம் கேட்டபோது என்னை சாதி ரீதியாக பேசி துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் விக்ரமன் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்