ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி நடத்துவேன் – இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன்
																																		தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன் என இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து வைத்து நேற்றையதினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் கானம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக முற்றவெளியில் நடந்திருக்கின்றது, யாழ்ப்பாண மக்கள் எமக்கு நிறையவே ஆதரவை தந்தார்கள்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கும், போரின் போது இறந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி இருந்தோம், நிகழ்வுக்கு மக்களுடைய ஆதரவு நிறையவே கிடைத்திருந்தது,
ஒவ்வொரு வருடமும் இந்த யாழ் கானம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றேன் எமக்கு ஆதரவ வழங்கிய ஊடக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
        



                        
                            
