இலங்கையில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம்
இலங்கையில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக கிங், களு, நில்வலா மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் இன்னும் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வலா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகமாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹாகொட, அதுரலிய, அக்குரஸ்ஸ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான வெள்ள நிலைமைகளில் இருந்து உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக பிரதேசவாசிகள் மற்றும் அவ்வழியாக செல்லும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் இன்று (07) சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.