கிண்ணியா குரங்குபாஞ்சான் காணி விவகாரம் : தௌபீக் எம்.பி மக்களுடன் களத்தில்…!

அண்மையில் கிண்ணியா குரங்குபாஞ்சான் இராணுவ முகாம் காணிக்குள் பௌத்த மதகுருமார்கள் தலைமையிலான குழுவினர் முறையற்ற விதத்தில் வருகைதந்த விடயம் அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த காணி விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அப் பிரதேசத்திற்கு வெள்ளிக்கிழமை (6) கள விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது அப்பிரதேச மக்களுடன் நீண்டநேரம் கலந்துரையாடியதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)