ஐரோப்பா

நெருக்கடியில் ரஷ்யா – புட்டின் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரஷ்யாவுக்கு பலம் சேர்க்கும் வகையில் மேலதிகமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அதற்காக திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அரசாங்க இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சேர்பவர்களுக்கான வயதெல்லை 27 இல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, உக்ரேனுடனான யுத்தம் ஆரம்பமாகி 20 மாதங்களை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய ஆயுத படையினர் உக்ரேனுடன் நீண்ட யுத்தத்தை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக முன்னர் விளாடிமீர் புட்டின் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவினால் சட்ட விரோதமாக உக்ரேனில் இணைக்கப்பட்ட பகுதிகள் உட்பட, ரஷ்ய கூட்டமைப்பின் அனைத்து பகுதிகளிலும் ஒக்டோபர் மாதம் முதல் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!