அவசரகால மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்: கெஹலிய ரம்புக்வெல்ல
அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்வனவுகளின் அவசரநிலை இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், மற்றொரு தொற்றுநோய் போன்ற ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்த செயல்முறை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, தற்போது சுமார் 170 முதல் 200 வரையான மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
(Visited 8 times, 1 visits today)