இலங்கை ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (19.09) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடனை செலுத்துவதில் இலங்கை படிப்படியாக அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றம் வெளிப்படுவதாகவும், அது தொடர்ந்தால் இலங்கையின் நிலை சிறப்பாக இருக்கும் என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் காட்டிய ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)