லிபியாவில் ஏற்பட்ட பேரழிவு : அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு!
லிபியாவின் டெர்னா அணை உடைந்தமையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இது குறித்து அரசாங்கத்திற்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக டெர்ணா அணை குறித்து நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்ட நீரியல் நிபுணர் அப்துல் வானிஸ் அஷூர் இந்த பேரழிவை நீண்ட காலத்திற்கு முன்பே கணித்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அணையில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொது நீர் ஆணையத்தின் நிபுணர்கள் மூலமாகவோ அல்லது அணையை மதிப்பிடுவதற்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்களின் மூலமாகவோ இது குறித்த எச்சரிக்கைகள் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தததாக அவர் கூறிள்ளார்.
(Visited 7 times, 1 visits today)