வடகொரியாவை தொடர்ந்து சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தும் ரஷ்யா!
அபிவிருத்தி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், ரஷ்யாவுடன் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என்று சீனாவின் துணைப் பிரதமர் ஜாங் குவோகிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிவிப்புகளை சீனாவின் அரசு செய்தித் தளமான சின்ஹுவாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோது ஜாங் இவ்வாறு கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கும் – ரஷ்யாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கு இடையிலான சந்திப்பு சர்வசேத அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில். ரஷ்யா, சீனா உறவும் பலப்படுத்தப்பட்டு வருவது மேற்கத்தேய நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.