யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
 
																																		சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நீலாப்பொல கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த டி.டி.சில்வா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்திற்கு கூலித்தொழிலின் நிமிர்த்தம் சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச்.குணரத்ன குறித்த இடத்திற்கு விஜயம் சென்று மேற்கொண்டிருந்தார். மேலதிக விசாரணைகளை சேருவில பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
