வாழ்வியல்

முளைகட்டிய பயறுகளை சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயிறு வகைகள், ‘சூப்பர் ஃபுட்ஸ்’ என்று குறிப்பிடப்படுகின்றன. முளைகட்டிய பயிறு வகைகளை பலர் பச்சையாக உட்கொள்கிறார்கள்; சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள்.

Sprouting Lentils - DIY & Curry Recipe - Laura's Idea

குறைவான கலோரி, அதிக பைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்நாக்ஸாக முளைகட்டிய பயிர்கள் குறிப்பிடப்படுகின்றன.

முளைகட்டிய பயிர்களில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இவற்றை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் சில நன்மைகளும் கூடவே சில அபாயங்களும் உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

creative savv: Growing Lentil Sprouts in My Kitchen

நன்மைகள்:

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தச் சர்க்கரையை சிறப்பாகக் கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பான ஆய்வில், ‘ரா ஸ்ப்ரவுட்ஸ்’ என்பவை என்சைம் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறனை கொண்டிருக்கலாம். எனவே, இது சர்க்கரையை சரியாக உடைத்து ஜீரணிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.

செரிமான மேம்பாடு: முளைகட்டிய பயிர்களை பச்சையாக உட்கொள்ளும்போது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் மற்றும் செரிமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படுகின்றன: தினசரி உணவில் சமைக்காத முளைக்கட்டிய பயிறு வகைகளை சேர்த்துக்கொள்வது நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் ஹெச்டிஎல் ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால், இது மொத்த கொழுப்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

The Nutritional Value of Sprouted Lentils | Benefits and Potential Risks

தீமைகள்:

ஃபுட் பாய்சனிங்: முளைகட்டிய பயிறு வகைகளை பச்சையாக உட்கொள்ளும்போது அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும், இவை பரப்பு நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பயறுகளை முளைகட்டிய பின் அவற்றை அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவது நோய்களிலிருந்து தப்பிக்க உதவும்.

2,200+ Sprouted Lentils Stock Photos, Pictures & Royalty-Free Images -  iStock

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்கள்: ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்ப்பட்டால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான