மாரிமுத்துவின் குழந்தைகளை படிக்க வைத்தார் நடிகர் அஜித்
எதிர்நீச்சல்’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், மாரிமுத்துவின் குழந்தைகளை நடிகர் அஜித் படிக்க வைத்துள்ளார்.
இது குறித்து மாரிமுத்துவின் சசோதரர் பேசியதாவது,
மாரிமுத்து ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். இதை நாங்கள் தாங்கி தான் ஆக வேண்டும்.
‘வாலி’ படத்திற்கு பிறகு மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் 12-ஆம் வகுப்பு வரை அஜித் தான் படிக்க வைத்தார் என்று பேசினார்.





