கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளில் 4000 தொழில்வாய்ப்பு!
காலியாக உள்ள சுமார் 4000 கிராம சேவை உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவாக புதிய ஆட்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனை கையாள்வதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து 1 கிராமப்புற சேவை களங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் e-GN திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
(Visited 6 times, 1 visits today)