பொழுதுபோக்கு

மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மிஸ் ஆகி இருந்தாலும், ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்கிற பாடலுக்கு அசத்தலான ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். மீனா 30 வயதை கடந்த பின்னர், சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியது.

எனவே… சிலகாலம் டிவி சீரியல்களில் நடித்து வந்த இவர், திரைப்படங்களிலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார்.

பின்னர் கடந்த 2009-ம் ஆண்டு, பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் தன்னுடைய மகள் நைனிகா பிறந்த போது நடிக்காமல் இருந்த மீனா, பின்னர் வழக்கம் போல் நடிக்க துவங்கினார்.

குறிப்பாக மலையாளத்தில் மோகன் லால், மமூட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

திருமணத்திற்கு பிறகு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மீனா வாழ்க்கையில் கடந்த ஆண்டு யாருமே எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நடந்தது. புறாக்களின் எச்சத்தால், ஏற்படும் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் மீனா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கினார். ஆனால் மீனா அம்மாவின் அரவணைப்பு, மகள் நைனிகாவின் அன்பு, மற்றும் தோழிகள் கொடுத்த ஊக்கம் மிக விரைவாகவே மீனாவை அந்த சோகத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தது. சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மலையாள படம் ஒன்றில் மீனா நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

சிறுவதில் இருந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வரும் நடிகை மீனாவின் சொத்து விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மீனாவின் பேங்க் பேலன்ஸ் பல கோடி இருக்கிறதாம்.

பல இடங்களில் மீனாவுக்கு சொந்தமாக வீடுகளும் உள்ளது என கூறப்படுகிறது. அதே போல் சில சொகுசு கார்களையும் மீனா வைத்துள்ளார். விலை உயர்ந்த தங்கம், வைரம் போன்ற நகைகளை மீனா பிரியப்பட்டு அணிவாராம். எனவே இவரின் சொத்துக்கள் சுமார் 50 முதல் 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இதை தவிர மீனாவின் கணவர் வித்யா சாகர் தான் இறப்பதற்கு முன்பே, சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள் மற்றும் வசதியான குடும்பத்தில் பிறந்ததால், தனக்கு வரவேண்டிய அதனை சொத்துக்களையும் மீனாவின் பெயருக்கு எழுதி வைத்து விட்டதாக கூறப்படுகிறது . இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ள நிலையில், எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது தெரியவில்லை.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்