தலை முடியால் உலகச் சாதனை படைத்த அமெரிக்கப் பெண்
அமெரிக்காவில் தமது தலையின் பின்புறத்தில் ஆக நீளமான முடி வளர்த்து பெண் ஒருவர் உலகச் சாதனை படைத்துள்ளார்.
தலையின் பின்புறத்தில் மட்டும் சற்று நீளமாக முடி வளர்க்கும் முல்லட் என்ற சிகை அலங்காரத்தின் ஊடாகவே அவர் சாதனை படைத்துள்ளார்.
தலையின் மற்ற பகுதிகளில் முடி கட்டையாகவே இருக்கும். டென்னசீ (Tennessee) மாநிலத்தைச் சேர்ந்த டாமி மனிஸின் (Tami Manis) முல்லட் சுமார் 172 சென்டிமீட்டர் நீளம்.
அது கிட்டத்தட்ட சராசரி நபரின் உயரமாகும்.. தாதியாகப் பணிபுரியும் மனிஸ் 1980களிலிருந்து முல்லட் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் 33 ஆண்டுகளாக தமது முல்லட் முடியை வெட்டவில்லை. முடி இவ்வளவு நீளம் வளர்ந்ததற்கு தமது மரபணுவும் ஆர்கன் எண்ணெயுமே காரணம் என்று மனிஸ் BBC-யிடம் கூறினார்.
முடி தம்மைவிட நீளமாக இருப்பதால் பெரும்பாலும் அதைக் கட்டியே வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.