இலங்கைக்கு கிடைத்த கௌரவம்!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆளுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார்.
உலக ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்கள் 21 பேர் பட்டியலில் அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
நியூயோர்க்கை தளமாகக் கொண்ட “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை” வருடாந்தம் நடத்தும் கணக்கெடுப்பின்படி, ‘ஏ’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் கலாநிதி நந்தலால் வீரசிங்க சேர்க்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல், “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை”, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி ஆளுநர்களை வரிசைப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியா மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்ரீகாந்த தாஸ் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.