டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் போராட்டம்
டோல்கேட் ஊழல் மற்றும் கட்டண உயர்வை கண்டித்து DYFI அமைப்பினர் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் தடுப்பையும் தாண்டி முற்றுகையிட முயன்றதால் குண்டுகட்டாக தூக்கி பொலிஸார் கைது செய்தனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது இந்த சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு டி ஒய் எப் ஐ சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டம் காரணமாக இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட DYFI அமைப்பைச் சார்ந்தவர்கள் திடீரென சுங்கச்சாவடியை முற்றுகைட்டு உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர் அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.