வெந்நீர் குடித்தால் குறையும் கொலஸ்ட்ரால்!
இன்றைய காலத்தில் தவறான உணவை உண்பதால் பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. இந்த நோய்கள் சில பொதுவானதாகி வருகின்றன. அதில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, இது நமது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படுகின்றது.
எனினும் அதன் அதிகரிப்பு நமக்கு ஆபத்தானது. அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த சூடான தண்ணீர் மிக சிறந்த நிவாரணமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம்.
கொலஸ்ட்ராலில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன
LDL: Low Density Lipoprotein, அதாவது எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் என்று கருதப்படுகிறது. இதே கொலஸ்ட்ரால் தான் நமது தமனிகளில் குவிந்து கொண்டே இருக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை சாப்பிடுவதால், நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகிறது. வறுத்த பொருட்கள் மற்றும் துரித உணவுகளில் பெரும்பாலான கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. மது அருந்துவதாலும், சிகரெட் பிடிப்பதாலும், நெய் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவதாலும் கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் உடலில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளில் சேரத் தொடங்குகிறது.
HDL: High Density Lipoprotein அதாவது எஸ்டிஎல் நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். இரத்தத்தில் HDL அளவு அதிகமாக இருந்தால், அது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு HDL அளவைப் பராமரிப்பது அவசியம். 20 வயதை கடந்தவுடன் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மேலும், அவ்வப்போது சீரான இடைவெளியில் தொடர்ந்து செக் செய்யவும்.
வெந்நீரால் கொலஸ்ட்ராலை குறைக்க முடியுமா?
அதிக கொழுப்பை குறைக்க சூடான நீர் பயனுள்ளதாக இருக்கும் என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. வெதுவெதுப்பான வெப்பம் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் நம்புகிறார்கள். இது பல நோய்களில் இருந்து நிவாரணம் காண பயனுள்ளதாக இருக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சூடான தண்ணீர் உதவுகிறது. இது இரத்த நாளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. வெந்நீரைக் குடிப்பதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையும், உடலில் உள்ள நச்சுப் பொருள்களும் வெளியேறும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பொரித்த பொருட்களை சாப்பிடுவதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. அதிக கொலஸ்ட்ராலில், லிப்பிடுகள் இரத்த நாளங்களில் ஒட்டிக்கொள்கின்றன. உங்கள் இரத்த நாளங்களில் இருக்கும் இந்த லிப்பிட்களை குறைக்க வெந்நீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து குடிப்பதால், கொலஸ்ட்ரால் குறையும்.
அதிக கொலஸ்ட்ராலா? வெந்நீர் குடிப்பதால் இந்த நன்மைகள் கிடைக்கும்:
– வெந்நீரைக் குடிப்பதன் மூலம், இரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் உருகி அங்கிருந்து வெளியேறி, இரத்த நாளங்களைத் தூய்மைப்படுத்துகிறது.
– வெந்நீர் இரத்த நாளங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் லிப்பிட்களை சுத்தப்படுத்துகிறது.
– கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் எண்ணெய் உணவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள். அதைக் குறைக்க வெந்நீர் உதவுகிறது.
– சிலர் சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்துவார்கள். இப்படி செய்வது கொலஸ்ட்ரால் உடலில் சேர அனுமதிக்காது.
-சுடுதண்ணீர் இரத்தத்தை மேன்மையான முறையில், உடலில் திறம்பட எடுத்துச்செல்ல உதவுகிறது.
-வெந்நீர் முழு உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவுகிறது.
வெந்நீர் அருந்துவதற்கான சரியான வழி:
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கவும். அதில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம். தண்ணீரை 120 டிகிரி பாரன்ஹீட் வரை மட்டுமே சூடாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடலில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
– மொத்த கொழுப்பு: 200- 239 mg/dL க்கும் குறைவாக
– HDL: 60 mg/dL க்கு மேல்
– LDL: 100 mg/dL க்கும் குறைவாக
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)