உயிர் மற்றும் உலக்குடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா!
தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் பிள்ளைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனையடுத்து வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வக் என பெயர் வைக்கப்பட்டதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

இதனையடுத்து அவ்வப்போது குழந்தைகளின் ஒளிப்படங்களையும் முகம் தெரியாதவாறு சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/Cwb8lqBRDT-/?utm_source=ig_web_copy_link





