பொழுதுபோக்கு

ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் சோகத்தில் நானி

இந்திய அரசு சார்பில் 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில், கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

மேலும், இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷல், ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நானி பதிவு தமிழில் ஜெய்பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை தேர்வு குழு நிராகரித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததால் நடிகர் நானி உடைந்த இதயமுடைய எமோஜியை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஜெய்பீம் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!