ஆஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்ட 26 கோடி மதிப்பிலான போதைச்செடிகள்
போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.ஆஸ்திரேலியாவில் பலர் சட்ட விரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதைச்செடிகளை பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்டோரியா மாகாணத்தில் கஞ்சா செடியை பெரிய அளவில் பயிரிட்டு வளர்ப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
அங்கு இருந்த கஞ்சா செடிகளை பொலிஸார் அழித்தனர். அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.26 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 2 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)