தலங்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு!

தலங்கமவில் இன்று (25.08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கோரம்பே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
.தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, கோரம்பே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், குறித்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)