விமான விபத்துக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை! ஜெலென்ஸ்கி
வாக்னர் தளபதி பிரிகோஷினின் மரணத்தில் உக்ரைன் சம்பந்தப்படவில்லை என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“இந்த சூழ்நிலையில் நாங்கள் ஈடுபடவில்லை, அது நிச்சயம். இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கிய்வில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பிர்கோஸின் எம்ப்ரேர் லெகஸி 600 ரக விமானத்தில் மாஸ்கோவில் இருந்து பிர்கோஸின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கிச் வாக்னர் தளபதி பிரிகோஷினின் சென்ற விமான விழுந்தது விபத்துக்குள்ளானது.
திடீரென விமான தலை குப்புறப் பாய்ந்தது. 30 விநாடிகளில் அந்த விமானம் 8000 அடி கீழே விழுந்தது என்று விமானத்தை டிராக் செய்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் தான் விமானத்தில் இருந்துள்ளனர்.
ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஏழு பயணிகளில் ரஷ்ய அதிபருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் ஒருவர் என தகவல் வெளியாகியது. மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் ப்ரிகோஜினின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான விபத்து குறித்து ரஷ்ய உளவுஅமைப்பினர் கிரிமினல் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சிலர், ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், பிர்கோஸின் சென்ற விமானம் சர்ஃபேஸ் டூ ஏர் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார். ஆனாலும், இது உறுதிப்படுத்தப்படவில்லை.