தமிழர் பகுதியில் மற்றுமொரு வீடு தாக்கப்பட்டு தீ வைப்பு! போலீசார் தீவிர விசாரணை
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளாய்.
இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி ,சோக்கேஸ் ,சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர்.
அத்துடன் இருமோட்டார் சைக்களி்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாகவும தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனயைடுத்து இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிசார் இன்று தடயங்களை ஆய்வுசெய்தனர்,
இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 20 வயது இளைஞன் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினரகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்திருந்தனர்
கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் நடந்து சில மாதகள் ஆனா நிலையிலே யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் நேற்று இச்சம்பவம் பதிவிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.