உலகை அச்சுறுத்த தயாராகும் புதிய கெரோனா – WHO அவதானம்
புதிய வகை கொரோனாவை கண்காணிக்கப்போவதாக உலகச் சுகாதார நிறுவனம், தெரிவித்துள்ளது.
BA.2.86 என்றழைக்கப்படும் அது, பல வகைகளாக உருமாறாக்கூடும் என்பதால் கண்காணிக்கப்படுகிறது.
இதுவரை உலக அளவில் குறைந்தது நால்வர் அந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு Omicron வகை கொரோனா தொற்றினால் உலகில் அதிகமானோருக்குக் கோவிட் நோய் ஏற்பட்டிருந்தது.
அதேபோல இம்முறையும் பலர் பாதிக்கப்படலாமென நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
BA.2.86 கொரோனா வகை, தற்போது பரவும் கொரோனா கொடியதா என்பதை இப்போதே உறுதியாகக் கூறமுடியாது என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்லிற்று.
அதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்ள இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதாக அது கூறியது.
(Visited 4 times, 1 visits today)