சிறப்பு வசதிகளுடன் வெளியீட்டிற்கு தயாராகும் iPhone 15
ஆப்பில் நிறுவனம் ஐபோன் 15 மாடல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இது பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், ஐபோன் 15-இல் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று தகவல்கள் உறுதி செய்துள்ளன.
மிக முக்கியமாக புதிய வடிவத்தை ஐபோன் 15 பெறுகிறது. மேலும், ஐரோப்பிய யூனியன் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் ரீசார்ஜபிள் சாதனங்களிலும், டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்ததைத் தொடர்ந்து, ஆப்பிள் தங்களின் பிரத்யேக லைட்னிங் சார்ஜருக்கு விடை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை எப்போது வெளியிடும் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதிய ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள், செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நிறுவன ஊழியர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என ஆப்பிள் அறிவித்துள்ளதாக 9to5Mac இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டெக் துறை புதிய ஐபோன் வெளியிட்டுக்கு காத்து கிடப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் சரியாக செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், இதுவரை நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமைகளில் தான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் செப்டம்பர் 7, 13 ஆகிய தினங்கள் புதன்கிழமையாக வருகிறது. எனவே அடுத்து வரும் செப்டம்பர் 22 அன்று ஃபோன் வெளியீடு இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.
ஐபோன் 15 சீரிஸ் சில அற்புதமான புதிய அம்சங்களுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிடைத்த தகவல்களின்படி, மெல்லிய பெசல்களை புதிய ஐபோன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
மேலும், டிஸ்ப்ளே பக்கவாட்டில் வளைந்ததாக கர்வ்டு வடிவில் கொடுக்கப்படும் எனத் தகவல்கள் உலாவி வருகின்றன. ஐபோன் 15 சீரிஸில் இடம்பெறும் 4 மாடல்களுக்கு டைப்-சி ஆதரவு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
ப்ரோ மாடல்களைப் பொறுத்தவரை, மெல்லிய தோற்றத்திற்கான புதிய டைட்டானியம் உலோகம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஐபோன் 15, 15 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 14 ப்ரோவைப் போலவே A16 பயோனிக் சிப் கொடுக்கப்படுகிறது.
அதேநேரம் ஐபோன் 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மேம்பட்ட பதிப்புகளில் புதிய ஏ17 பயோனிக் சிப் அறிமுகம் செய்யப்படுகிறது. கூடுதலாக, புரோ மாடல் ஐபோனில் ஒரு புதிய பெரிஸ்கோப் லென்ஸ் கொடுக்கப்படுகிறது. இது புகைப்பட பிரியர்களுக்கு மேம்பட்ட ஆப்டிகல் ஜூம் திறன்களை வழங்குகிறது. இச்சூழலில், தற்போதைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது புதிய ஐபோன்களின் விலைகள் 200 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.