சிங்கப்பூரில் 480 பேருக்கு குடியுரிமை!
சிங்கப்பூரில் அண்மையில் 480 குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவர்கள் சுவா சூ காங் மற்றும் ஹாங் கா நார்த் SMC ஆகிய தொகுதிகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை பாடி சிங்கப்பூரர் என்ற அந்தஸ்தை அவர்கள் பெற்றனர். அவர்களுக்கான குடியுரிமை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் மற்றும் அதன் துணை அமைச்சர் லோ யென் லிங் ஆகியோர் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கினர்.
சிங்கப்பூருக்காக தொடர்ந்து பங்களிப்பும் செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
(Visited 7 times, 1 visits today)