இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு
 
																																		இலங்கையில் குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் வந்து தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
