ஈரான்- ஷியா முஸ்லிம்களின் கோவிலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்- ஒருவர் பலி

ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக் ஆலயத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை
(Visited 16 times, 1 visits today)