புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கி 6 பேர் பலி!
புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலேயக் கால்வாயில் மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஐந்து முதல் 10 பேர் வரை காணவில்லை என்று பிரெஞ்சு கடலோர ஆணையமான பிரேமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கடலோரக் காவல்படையினர் கப்பலில் இருந்து சுமார் 50 பேரை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இன்று சனிக்கிழமை அதிகாலையில் கலேஸுக்கு அருகிலுள்ள சங்கத்தே கடற்கரையில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு சிரமத்தில் இருப்பதாக ஒரு கப்பல் முதலில் எச்சரிக்கையை எழுப்பியது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரெஞ்சு லைஃப் படகு வந்தபோது, அவர்கள் கடலில் ஏராளமான மக்களைக் கண்டனர், சிலர் உதவிக்காக அலறினர். புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் செல்லும் மற்றொரு படகுடன் ஏற்கனவே சேனலில் இருந்த டோவர் லைஃப் படகு மீட்பு நடவடிக்கையில் இணைந்தது.
மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். – பெரும்பாலும் படகுகள் அதிக சுமையுடன் இருததால் அவற்றில் எத்தனை பேர் இருந்தார்கள் ர்கள் என்பதைக் கூறுவது கடினம்.
பிரான்ஸ் கடற்படை விமானமும், ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பிரெஞ்சு பிரதேசத்தில் நடந்தாலும், இந்த வகையான நடவடிக்கைகளால், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு மீட்புக் குழுக்கள் இணைந்து முடிந்தவரை பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.