பச்சை குத்தியவர்கள் இரத்த தானம் செய்யலாமா?
சிவப்பு ரத்த உயிரணுக்களை 6 வாரங்களுக்கும் நுண்தட்டணுக்களை (platelets) 7 நாள்களுக்கும் மட்டுமே வைத்திருக்க முடியும்.
மருத்துவமனைகளில் தினமும் 400 பை ரத்தம் தேவைப்படும். ஆரோக்கியமானவர்கள் ரத்த தானம் செய்ய முன்வரலாம்.
தற்போது சிங்கப்பூர்வாசிகளில் 1.8 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த தானம் செய்கிறார்கள். ஆனால் இரத்த தானம் செய்வதில் சிலருக்குச் சந்தேகங்கள் இருக்கலாம்.
பச்சை குத்தியவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.
யார்யார் ரத்த தானம் செய்யலாம்?
உடலில் துளை போட்டவர்கள் அல்லது பச்சை குத்தியவர்கள்
சுத்தமான, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஊசிகளால் பச்சை குத்தியிருந்தால் அல்லது உடலில் துளை போட்டிருந்தால் ரத்த தானம் செய்யலாம்.
ஆனால் சந்தேகமாக இருந்தால் பச்சை குத்திய அல்லது உடலில் துளை போட்ட 3 மாதங்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.
– புகைபிடிப்பவர்கள்
– அதிகக் கொழுப்பு உள்ளவர்கள்
– உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
ஆகியோரும் ரத்த தானம் செய்யலாம்.
உடல் கொழுப்பு அளவும் உயர் ரத்த அழுத்தமும் நிலையாக இருப்பதோடு வேறு எந்தச் சுகாதாரச் சிக்கல்களும் இல்லாத நிலையில் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறப்படுகின்றது.