தரமான சம்பவம் பண்ணிட்டார் ரஜினி… ஜெயிலர் விமர்சனம் இதோ
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நள்ளிரவு உலகளவில் வெளியானது.
நெல்சன் இயக்கிய இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
ஜெயிலர் படத்தின் முதல் பாதி தலைவர் மற்றும் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. ஒரே ஒரு ஆக்ஷன் சீன் தான் அதுவும் இடைவேளைக்கு முன் வருகிறது. இரண்டாம் பாதி மாஸ் காட்சிகள் நிறைந்ததாகவும் நிறைய டுவிஸ்ட் உடனும் இருக்கும். ஜெயிலர் உங்களை ஏமாற்றாது என கூறப்படுகின்றது.
முதல் பாதி ஓவர். ஒரு தரமான கம்பேக் படம். நெல்சன் பிண்ணிட்டாப்ல. அனிருத் எங்கிருந்து யா உனக்கு மட்டும் இவ்ளோ வெறி வருது என மற்றுஅமாருவர் பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.
ஜெயிலர் முதல் பாதி சூப்பராக உள்ளது. முழுக்க முழுக்க தலைவர் சம்பவம். இதேபோன்று இரண்டாம் பாதியும் சென்றால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
படம் தரமா இருக்கு. பண்டிகையை கொண்டாடுங்கலே என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு உள்ளார். மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே இது தரமான கம்பேக் படமாக இருக்கும் போல தெரிகிறது.
https://twitter.com/MovieCrow/status/1689464911271706624