அதிரடியாக ரிலீஸ் தேதியை மாற்றிய ஜெயிலர்… அடங்கிப்போன பரிதாபம்
வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்திற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு பிறமொழி ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிலும் மலையாளத்தில் இந்த படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்த படத்தையும் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் வெளியிடுவதாக அறிவித்தனர்.
இதனால் மலையாள ஜெயிலர் பட குழு நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் இடம் படத்தின் டைட்டிலை மாற்றும் படி வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டனர். ஆனால் நெல்சன் அதற்கு சுத்தமாகவே பிடி கொடுக்கவில்லை.
இதனால் மலையாள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றி உள்ளனர்.
தமிழ் ஜெயிலர் படத்திற்கு கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மலையாள ஜெயிலர் படத்திற்கு 75 சதவீத திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை.
இதனால் மலையாள ஜெயிலர் படக் குழு தங்களுடைய படத்தின் டைட்டிலை அப்படியே வைத்துக்கொண்டு படத்தை மட்டும் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் செய்யப் போவதாக ஜெர்க்கடித்து விட்டனர்.
ஆனால் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் குறித்த தேதியில் வரும் வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதிலும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்து ரணகளம் செய்யப் போகிறது. இந்த படத்தின் மூலம் நெல்சனுக்கு நல்லதொரு கம்பேக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
.@tamannaahspeaks's #Kaavaalaa performance lights up the stage😍 #JailerAudioLaunch
▶ https://t.co/2A0J4hmFRZ#Jailer #JailerFromAug10
— Sun Pictures (@sunpictures) August 8, 2023