தமிழ்நாடு

அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் குஷ்புவின் பேச்சால் பாஜகா- வில் வெடித்த குழப்பம்

பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும் ,பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன்,தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில் வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும் கேட்வாக் நடந்து மாணவ,மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.மணிப்பூர் குறித்த கேள்விகளுக்கு, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்தார்.

DMK orator arrested for 'derogatory remarks' on BJP leader Khushbu Sundar-  The New Indian Express

மேலும் குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது எனவும், இப்பொழுது அவரை அமெரிக்கா கூப்பிட்டு கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும், பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை இருக்கிறது. பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார் எனவும், அவரது ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

திரைத்துறையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு,சூப்பர் ஸ்டார் யார் என்பது இப்பொழுது முக்கியமான விசயமா ? எல்லாவற்றிக்கும் குஷ்பு பதில் சொல்ல முடியாது என பதிலளித்தார்.
கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7ம் திகதி தேதி அவருடைய நினைவு நாள், காலையிலேயே அவரது வணக்கம் சொல்லி என்னுடைய
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கின்றேன். கலைஞர் குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள் , அவரைப் பற்றி நன்றாக தெரியும் எனவும், வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம் எனவும் தெரிவித்தார்.

ரிஷி சுனக் 'வாழும் பாலம்' - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து | Prime Minister  Narendra Modi Greetings for Rishi Sunak - hindutamil.in

பேசன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள், இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது எனவும், இப்படி ஒரு சட்ட விதி இருக்கிறதா? சின்ன சிரிப்பே இல்லாமல் பொதுவாக எல்லா பேசன் ஷோக்களிலும் பார்க்க முடிகின்றது எனவும் தெரிவித்தார். கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும் என தெரிவித்த குஷ்பு,இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அமைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள் பயன்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை ,அதே வேளையில் நமது கலாச்சாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன்.
பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்