3 நாட்களாக லிஃப்டிற்குள் சிக்கித் தவித்த இளம் பெண்! இறுதியில் நடந்தது என்ன?
லிஃப்டிற்குள் 3 நாட்களாக சிக்கித் தவித்த இளம் பெண் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. இங்கு தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது உறவினர்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் லியோன்டிவாவை போலீசார் சடலமாக மீட்டுள்ளனர்.
ஜூலை 24 ஆம் திகதியன்று லியோன்டிவா 9 மாடி கட்டிடத்தில் உள்ள லிஃப்டில் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறால் லிஃப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. அதற்குள் அடைபட்ட நிலையில், லியோன்டிவா கத்தி கூச்சலிடடுள்ளார். இருப்பினும் வெளியில் இருந்து அவருக்கு உதவி கிடைக்கவில்லை.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட லியோன்டிவாவால் 3 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு 6 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
இது தொடர்பாக சீனாவை சேர்ந்த லிஃப்ட் நிறுவனத்தின் மீது போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனதை பதைபதைக்கும் வகையில் லிஃப்டில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்த 26 ஆம் தேதி இத்தாலியில 61 வயதாகும் பெண் ஒருவர் மின் தடை ஏற்பட்டதால் லிஃப்டில் சிக்கி உயிரிழந்தார். 2 மாடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.