ஐரோப்பாவில் பிரபல கடற்கரைப்குதி தீக்கிரையாகலாம் – வெப்பால் காத்திருக்கும் ஆபத்து

ஐரோப்பாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுவதால் மற்றுமொரு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மிகவும் பிரபல கடற்கரைகளைக் கொண்ட பிரெஞ்சு ரிவியேரா (French Riviera) வட்டாரம் தீக்கிரையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்கில் இருக்கும் அந்த வட்டாரம் இன்று முதல் அதிக ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்படுகின்றது.
இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பற்றிய அச்சம் தொடர்கிறது. ஐரோப்பாவில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.
கிரீஸ் ஆகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து எரிகிறது.
(Visited 13 times, 1 visits today)