உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறிய வெப்பக்காற்று!
ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் அச்சுறுத்தும் வெப்பக்காற்று பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளியல் கருத்தரங்கின் அறிக்கை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
1990ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் அதீத வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கு மேல் கூடியது.
கரியமில வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படாவிட்டால், அது 2080களில் நான்கு மடங்காகும் என்று எச்சரிக்கப்பட்டது.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிட்டது. மிதமிஞ்சிய வெப்பம், ஏழை மக்களை அதிகம் வாட்டுவதாகக் கூறப்பட்டது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சில வேளைகளில் மரணம்கூட நிகழக்கூடும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வேலை செய்வதற்கு உகந்த வெப்பநிலை வரையறுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் மரங்கள், பசுமைக் கூரைகள், செடிகொடிகளுடன் நகரங்கள் மறு-வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை சுட்டியது.