பாத வெடிப்பு மறைய எளிய டிப்ஸ்!
தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும்.
குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
பாத வெடிப்பை தவிர்க்க சிலை எளிய டிப்ஸ்
- வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
- காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.
- கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம்.
இவற்றோடு வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.