பிரான்ஸில் கிரீம்கள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
பிரான்ஸில் வெயில் காலங்களில் பயன்படுத்தம் கிரீம்களினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
suncream இல் இருந்து ஒரு ரசாயனத்தை அகற்றுமாறு பிரான்ஸின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
suncreamஇல் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக அறிவியல் சான்றுகள் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்டோக்ரிலீன் என்ற வேதிப்பொருள் பல அழகுசாதனப் பொருட்களில் பரவலாகக் காணப்படுகிறது.
இப்போது, பிரான்ஸின் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்பு நிறுவனம், சன் ஸ்கிரீன் தயாரிப்புகளில் இருந்து ரசாயனத்தை அகற்ற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஒரு ஆய்வில், ஆக்டோக்ரிலீன் பென்சோபீனோனாக மாறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது.
(Visited 15 times, 1 visits today)