இத்தாலியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 12,000 விமான நிலைய ஊழியர்கள்!
இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரண்டரை லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் சுமார் 12 ஆயிரம் விமான நிலைய ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ரோம், மிலன், வெனிஸ் நகர விமான நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரள்வது தவிர்க்கப்பட்டது.





