11 கிலோ உடல் எடையை குறைக்க உதவிய Ai – மகிழ்ச்சியில் தகவல்களை பகிர்ந்த நபர்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT கொடுத்த அறிவுரையைப் பின்பற்றி ஒருவர் 11 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
ChatGPT கொடுத்த அறிவுரை என்ன என்பதைப் பார்த்து உடற்பயிற்சியாளரே வியந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.
ChatGPT வழங்கிய உடற்பயிற்சி ஆலோசனையை பின்பற்றிய நபர் ஒருவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.
கொடுக்கப்பட்ட உடற் பயிற்சி திட்டத்தில் கடுமையாக செய்யும் பயிற்சிகள் எதுவும் இல்லை என்பதே சிறப்பு அம்சமாகும்.
அமெரிக்காவில் வசித்து வரும் ‘கிரெக் முசென்’ என்பவர், ஒரு ரூபாயட கூட செலவழிக்காமல் ChatGPT-ன் அறிவுரையைப் பின்பற்றி மூன்று மாதங்களில் 11 கிலோ எடையைக் குறைத்த விடயம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
“எனது உடல் எடையை எப்படி குறைக்கலாம் என ChatGPTயிடம் கேட்டேன். அப்போது ChatGPT எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதில் எனக்கு பிடித்தது எதுவென்றால், தூங்குவதற்கு முன்பாக நான் உடற்பயிற்சி செய்யப் பயன்படுத்தும் காலணிகளை, கதவுக்கு முன்னால் வைத்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும்.
ஏனென்றால் உடல் எடை குறைப்பில் முக்கியமானது காலையில் ஜாக்கிங் செல்வது. தூங்கி எழுந்ததும் கதவுக்கு முன்னால் காலணிகளை பார்க்கும்போது ஜாகிங் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அது தூண்டிவிடும்.
அதேபோல உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் சக்திக்கு மீறி வொர்க் அவுட் செய்தால் பசி அதிகரிக்கும். இதனால் அவர்களையும் அறியாமல் அதிக உணவு எடுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள். இதனால் சுலபமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ChatGPT எனக்கு அறிவுறுத்தியது.
இப்படி ChatGPT வழங்கிய சுலபமான ஆலோசனைகளைப் பின்பற்றியே நான் 11 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளேன். இதைப் பற்றி என்னுடைய பயிற்சியாளரிடம் கூறிய போது இது நல்லா யோசனை தான் என்றும் அவர் கூறினார்” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.