பொழுதுபோக்கு

சென்னையில் மனைவியுடன் தோனி வெளியிடப்பட்ட LGM பட ட்ரைலர்

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனியின் “தோனி என்டர்டைன்மென்ட்” நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஒரு தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் தமிழ்மணி என்கின்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் LGM என்று அழைக்கப்படும் Lets Get Married.

இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் நாயகியாக இவானா நடிக்க, தாயாக நடிகை நதியா நடித்துள்ளார். யோகி பாபு, தொகுப்பாளர் விஜய் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.

காதல் வயப்பட்டு திருமணத்தை நோக்கி நகரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இடையே ஏற்படும் சிறு வாக்குவாதத்தால், காதலனின் தாயை திருமணத்திற்கு முன்பு ட்ரிப் ஒன்றுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் நாயகி இவானா.

அந்த ட்ரிப்பில் அவர்களுக்கு என்ன நடந்தது, இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்த காட்சிகளோடு சொல்ல வரும் திரைப்படம் தான் LGM என்பது, வெளியான ட்ரைலரில் இருந்து தெரியவந்துள்ளது.

இன்று மாலை சென்னையில் நடந்த அப்பட நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டார் தல தோனி. இந்த நிகழ்ச்சியில் தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி கலந்து கொண்டனர்.

https://twitter.com/DHONIism/status/1678401844626743300

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!