மார்க் – மஸ்க் மோதலால் கின்னஸ் சாதனை புரிந்த MrBeast
திரெட்ஸ் செயலியில் முதன் முறையாக 1 மில்லியன் Followers பெற்று MrBeast என்ற பிரபல யூட்யூபர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று டுவிட்டருக்குப் போட்டியாக Threads என்ற புதிய செயலியை மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அறிமுகம் செய்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த MeBeast என்ற பிரபலமான Youtube தளத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர், Threads செயலியில் முதல் 10 லட்சம் Followersகளை கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி கடந்த 48 மணி நேரத்தில் மிஸ்டர் பீஸ்ட் சுமார் 2.7 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
Youtube என்ற மிகப்பெரிய டிஜிட்டல் கடலில் பல யூடியூபர்கள் பார்வையாளர்களைக் கவரவும் டிஜிட்டல் உலகில் அழியாத முத்திரையைப் பதிக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்த மிஸ்டர் பீஸ்ட், தனது ஆர்வம் மற்றும் தனித் திறமையால் யூடியூப் தளத்தில் முக்கியத்துவம் பெற்றார்.
மற்ற யூடியூபர்கள் தன்னுடைய பர்சனல் பிராண்டை உருவாக்கவும், பணம் சம்பாதிக்கவும் பதிவுகளைப் போடும்போது, இவர் மட்டும் சற்று வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு சேலஞ்ச் செய்வது போன்ற காணொளிகள் பதிவேற்றி வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் இருந்துகொண்டே உலகம் முழுவதுமுல்ல பார்வையாளர்களைத் தன்வசம் வைத்துள்ளார். மேலும் தனது சப்ஸ்கிரைபர்களுக்கும் அவ்வப்போது விளையுயர்ந்த கிப்ட் வழங்குவதில் பெயர் போனவர். அவர் எடுக்கும் ஒரு வீடியோக்காகவே மிகப்பெரிய தொகையை செலவு செய்வதிலும் வல்லவர்.