ஐரோப்பா

நதியைத் திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய இளம்பெண்!

பிரித்தானிய இளம்பெண் ஒருவர், துர்நாற்றம் அடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.

இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலைச் சேர்ந்த மேகன் ட்ரம்ப் (27)என்னும் இளம்பெண், துர்நாற்றமடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.சமூக ஆர்வலர்கள் பலர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட அந்த வித்தியாசமான திருமணத்தின் பின்னால் ஒரு நல்ல நோக்கம் உள்ளது.

அவர் திருமணம் செய்துகொண்டது Avon என்னும் நதி. அது, பிரித்தானியாவின் 19ஆவது பெரிய நதி. அந்த நதி பிரிஸ்டல் நகரம் வழியாக ஓடுகிறது.

மேகன், நீச்சலில் ஆர்வம் கொண்டவர் ஆவார். தங்கள் ஊர் வழியாக ஓடும் அந்த நதி இப்போது இருக்கும் நிலை கண்டு மனம் வருந்தி, தன்னைப்போன்ற எண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு நல்லெண்ணத்துடன் தனது திருமணத்திற்காக மக்களை அவர் அந்த நதிக்கு வரவழைத்துள்ளார்.

துர்நாற்றமடிக்கும் நதியைத் திருமணம் செய்த இளம்பெண்: காரணம் இதுதானாம் | Woman Married River Viral News

சாக்கடை கலந்து ஓடும் அந்த நதியிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக, திருமணத்துக்கு வந்திருந்த பலர் அங்கேயே வாந்தி எடுத்துள்ளனர். அந்த அளவுக்கு அந்த நதியின் நிலைமை மோசமாக உள்ளது.

திருமணம் முடிந்ததும் தான் அந்த நதியின் நலனில் வாழ்நாள் முழுவதும் அக்கறை காட்ட இருப்பதாக தனது திருமண உரையில் மேகன் தெரிவிக்க, திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும், தாங்களும் இனி அந்த நதி மீது அக்கறை செலுத்த இருப்பதாக தெரிவிக்க, மணப்பெண்ணுடைய இலட்சியம் நிறைவேறியுள்ளது. அந்த நதியை சுத்தமாகவேண்டும், இனியும் அதை அசுத்தம் செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் மேகன் அந்த நதியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்