பாரிய அளவு அழிக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகள் : காலநிலை மாற்றத்திற்கு இதுவும் காரணம்!
அமேசான் காடழிப்பு தடையின்றி தொடர்ந்ததால், வெப்பமண்டல மழைக்காடுகளின் பகுதியை உலகம் இழந்துள்ளதாக வன கண்காணிப்பு துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வன கண்காணிப்பு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேரிலாந்து பல்கலைக்கழகத்தால் சேகரிக்கப்பட்ட வனத் தரவுகளின் அடிப்படையில் சுமார் 41000 சதுர கிமீ (16000 சதுர மைல்கள்) வெப்பமண்டல மழைக்காடுகள் 2022 இல்அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030க்குள் பூஜ்ஜிய காடழிப்பை அடைவதாக சமீபத்திய உலகளாவிய உறுதிமொழி இருந்தபோதிலும் கடந்த ஆண்டு வெப்பமண்டல காடுகளின் இழப்பு 2021 அளவை தாண்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அதிகாரி ஒருவர்இ சமீபத்திய வரலாற்றில் அழிக்கப்படாத அல்லது மீண்டும் வளர்க்கப்படாத முதிர்ந்த காடுகள் அடங்குகிறது. இத்தகைய காடுகள் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாக்கின்றன. ஏனெனில் அவை அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன’ எனத் தெரிவித்தார்.