விடுமுறை நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை சனிக்கிழமை (ஜூலை 01) காலை 9.30 மணிக்கு கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், கொழும்பிற்கு வெளியே பயணிக்க வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளைய தினம் (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அது வெள்ளிக்கிழமை (30) பாராளுமன்றத்திலும் பொது நிதிக் குழுவின் (COPF) முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
(Visited 2 times, 1 visits today)