வாக்னர் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடும் ரஷ்யா!
பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ரஷ்யா கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது விசாரணையில் கலகத்தில் பங்கேற்றவர்கள் “குற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவிட்டனர்” என ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) கூறியுள்ளது.
பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் தரகு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர மாட்டோம் என ரஷ்யா ஒப்புக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.





