பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாரின் “தலைவர் 170” குறித்து சுடச்சுட புது அப்டேட்

ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள்.

இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

போலி என்கவுன்ட்டர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கன்னியாகுமரி மற்றும் கேரள எல்லை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!