வட்டி விகிதங்களை உயர்த்தும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து!
பேங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கால் சதவீத புள்ளியாக உயர்த்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் வங்கியிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்பவர்கள் மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள 1.4 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் அடமானங்களை ஆண்டு முழுவதும் மறுநிதியளிப்பு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், யு.எஸ். பெடரல் ரிசர்வ் முதல் ஐரோப்பிய மத்திய வங்கி வரை, பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதங்களை விரைவாக உயர்த்தி வருகின்றன. இது வாடிக்கையாளர்களிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.